அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார் டிரம்ப் | Donald Trump sworn in as 47th President of the United States
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார்.அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.இந்நிலையில், 47வது அதிபராக டிரம்ப் இன்று பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.இதற்காக, டிரம்ப் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு, புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் அம்பான் மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உள்பட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

