*திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது*

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்து வருவதாக 26 பேரை அடையாளம் கண்டனர்.

இவர்கள் பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் போலி ஆதார் பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

You missed