நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது.செய்தியாளா்களை செப்டம்பா் 5-ஆம் தேதி சந்திக்கும்போது அதிமுக தொண்டா்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பேன் என்றாா்.
