*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
*மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*கட லூர்*
ஆவணி மாதம் வளர்பிறையில் கடைசி முகூர்த்தம் என்பதால் கடலூர் திருவந்திபுரம் கோயிலில் புதுமண ஜோடிகள் அலைமோதினர். கடலூர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயிலில் இன்று ஆவணி மாதம் இறுதி முகூர்த்தம் நாள் இன்று சுமார் 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றனர்.
*கன்னியாகுமரி*
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தோவாளை மலர் சந்தையில் 250 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு, கேரள வியாபாரிகள் வண்டி வண்டியாக வந்து போட்டியுடன் வாங்கிச் செல்கின்றனர். மல்லிப்பூ ரூ.1300, பிச்சிப்பூ ரூ.1000, வாடாமல்லி ரூ.350, அரளிப்பூ ரூ.250, சம்பங்கி ரூ.300, ரோஸ் ரூ.200, தாமரை ரூ.10 என விலை உயர்ந்துள்ளது. பூ வியாபாரம் களைகட்டியுள்ளது.
*மதுரை*
உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளியின் முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி உயிரிழப்பு.
10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்
மருத்துவமனையில் அனுமதி.
*திருப்பத்தூர்:* ஜோலார்பேட்டை அருகே பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர் வளர்க்கும் கோழிகளை, விஷம் கலந்த அரிசியை நிலத்தில் தூவிக் கொன்றதாக புகார் – போலீசார் விசாரணை.
முருகன் என்பவர் 50க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்துவரும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவர் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்கும் நிலத்தில் விஷம் கலந்த அரிசிகளை தூவியுள்ளார்.
இதனை உண்ட 20 கோழிகள் உயிரிழந்துள்ள நிலையில், தாஸ் மீது முருகன் போலீசில் புகார்.
*கடலூர்* கே.என்.பேட்டையை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் இவரது மனைவி ஞானசவுந்தரி. இன்று காலை தந்தை சிவசங்கரன் இளைய குழந்தையோடு விளையாடி கொண்டிருந்த போது மூத்த குழந்தை குனஸ்ரீ வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் மூச்சு திணறியது. குழந்தையை மீட்டு பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
*சென்னையில்* சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
*தூத்துக்குடி* அருள்ராஜ் மருத்துவமனை அருகில் உள்ள பக்கிள் ஓடையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து பலியானார். அவரை தீயணைப்புதுறையினர் மீட்டனர். போலீசார் விசாரணை.
*கன்னியாகுமரி* நாகர்கோவில் கோட்டார் அருள்மிகு ஸ்ரீ பொன்பொருத்தி நின்றருளிய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு.என்.சுரேஷ்ராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
*கடலூர்* சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரைச் சேர்ந்த நசீர் (56), சரவணன் (45), கிருபாகரன் (35), முருகன் (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
___________________________
அரசியல்
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கலை நிகழ்ச்சிகள்
கல்வி
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
தமிழக அரசு
தமிழகம்
திமுக
திருச்சிராப்பள்ளி செய்திகள்
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
பள்ளிக்கல்வித்துறை
பூ மார்க்கெட்
பொதுமக்கள் பிரச்சினை
விபத்து
விழாக்கள்
விவசாயம்
