*ஏப்ரல் 01,*
*முட்டாள்கள் தினம்.*
முட்டாள்கள் நாள்,
ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 01ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்புமுறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டுக் கணிப்புமுறையை நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 01 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாட தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக ஆரம்பமாயிற்று.

