*மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
*திருச்சி*: பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடுகின்றனர்.
*கடலூர்* அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா என்கிற கவியரசன் (40). காவியா நேற்று சிதம்பரம் அருகே பு.முட்லூர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே கொலை செய்யப்பட்டுள்ளார். கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் காவியாவின் உடல் கண்டடுக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*ராணிப்பேட்டை மாவட்டம்* திமிரி கலவை சாலையில் உள்ள நரிக்குறவர் பகுதியில் வனத்துறையினர் வீட்டுக்குள் புகுந்து பாத்திரங்களை சேதப்படுத்தியது கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
*சேலம்:* ஏற்காட்டில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் மரம், செடி கொடிகளில் பனி படர்ந்து காணப்படுகிறது.
*ராமநாதபுரத்தில்* ரேஷன் அரிசி கடத்தலை
தடுக்க சென்ற அதிகாரிகள் மீது
சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி.
இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற அதிகாரிகளை சரக்கு வாகனத்தை விட்டு ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு.
ஓட்டுநர் உட்பட இருவர் தப்பி ஓடிய நிலையில், இளைஞர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை.
*தென்காசி* குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் நேற்றைய விட இன்று நீர்வரத்து அதிகமானதால் குளிக்க தடை, புலியருவி,சிற்றருவி குளிப்பதற்கு அனுமதி. குறைவான பயணிகளே வந்திருந்தனர்.
*கிருஷ்ணகிரி*
ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் கலவை
ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து.
சாலையோரம் நின்றிருந்த
பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு.
கழிவுநீர் கால்வாயின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் மூடி லாரியின் பாரம் தாங்காமல் உடைந்ததில் கவிழ்ந்தது லாரி.
*கன்னியாகுமரி* நாகர்கோவில் அமலா ஆடிட்டோரியத்தில் வைத்து இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி வார்டு எண் 13 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி துணை மேயருடன் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் திரு.என்.சுரேஷ்ராஜன் அவர்கள் பார்வையிட்டார்.
*சேலம்*
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு, மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.
காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள்,
ஆற்றில் இறங்கவோ, மீன் பிடிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல்.
*புதுக்கோட்டை மாவட்டம்* அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் பாரதியார் நகரை சேர்ந்த கண்ணன்(45)
அவருடைய சகோதரர் கார்த்திக் (37)ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது மாவட்ட காவல்துறை .
முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் என முதற்கட்ட தகவல்.
____________________________
அரசியல்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கல்வி
தமிழகம்
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
பாமக
முகப்பு பக்கம்
விழாக்கள்
