தமிழக கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் தாக்கப்பட்ட தினம் இன்று.
( *26 டிசம்பர் 2004* )
இந்து மஹா சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதில் சுமார் மூன்று லட்சம் பேருக்குமேல் இறந்தனர். தமிழகத்தில் கடற்கரையோரப் பகுதிகளில் இதன் தாக்கம் கடுமையாக இருந்தது.

