திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் மனு அளித்தார் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது-:

திண்டுக்கல் கீழக்கோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை 10 ஏக்கர் 38 சென்ட் இடத்தை திமுகவை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து

சின்னாளப்பட்டி வட்டார ஐ.பி.சுற்றுலா வேன் மற்றும் கார் உரிமையாளர்கள் நல சங்கம் காந்திகிராமம் என்ற பெயரில் போர்டு வைத்து சட்ட விரோதமாக திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர்

எனவே திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை காத்திட வேண்டியும், கோவில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 18 =

You missed