
இராசிபுரம்,மார்ச்,1-
இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி பஞ்சாயத்து பகுதியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆயில் பட்டி ஊராட்சியில் கழகத் தலைவர் தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்கள் அறிவுறுத்தல் படியும் . மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் அண்ணன் மதிவேந்தன் அவர்கள் ஆலோசனை படியும் ஆயில் பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில்
திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.பிரகாசம், தலைமை வகித்தார்.
இளைஞர் அணி பாண்டியன்,
கிளை செயலாளர் லட்சுமணன், முருகேசன் ,கணேசன் அண்ணாமலை,வார்டு கிளை செயலாளர் காளிதாஸ்,பச்சியப்பன், பெரியசாமி,சீனி, துணை அமைப்பாளர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு தளபதியாரின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 100 கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
