புதுச்சத்திரம்;மே,17-
புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம் கிராமத்தில் பிரத்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இந்த மாரியம்மனுக்கு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
இன்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு கும்பம் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.மேலும் இந்த திருவிழாவில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
…….. பிரபு நிருபர் தமிழ்நாடு @புதுடெல்லி

