
*=====*
1522 : பெர்டினன்ட் மெகல்லனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயின் வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்தக் கப்பல் என்ற பெயரைப் பெற்றது .
1620 : வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையிலிருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
1642 : இங்கிலாந்து நாடாளுமன்றம் மேடை நாடகங்களுக்கு தடை விதித்தது.
1776 : கரீபியன் தீவான குவாதலுப்பை சூறாவளித் தாக்கியதில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் .
1885 : கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
1899 : பிரெஞ்சு ராணுவம் முதல் முதலில் மோட்டார் சைக்கிள் மூலம் செய்திகள் அனுப்பும் முறையை துவக்கியது.
1932 : கனடாவின் முதல் தொலைக்காட்சி நிலையம் மாண்ட்ரியாவில் தொடங்கப்பட்டது.
1939 : இரண்டாம் உலகப் போர்:- தென்னாப்ரிக்கா, ஜெர்மனி மீது போர் தொடுத்தது.
1940 : ருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார்.
அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடிசூடினார்.
1943 : அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர்.
1944 : சோவியத் படைகள் எஸ்டோனியாவின் டார்ட்டு நகரைக் கைப்பற்றின.
1946 : இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி.எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1948 : நெதர்லாந்தின் ராணியாக ஜூலியானா முடிசூட்டப்பட்டார்.
1951 : தினமலர் நாளிதழ் தொடங்கப்பட்டது.
1955 : துருக்கி, இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் நடைபெற்றன.
10 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1965- இந்திய – பாகிஸ்தான் போர்:- இந்தியா பாகிஸ்தானை தாக்கி லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
1966 : தென்னாப்ரிக்க பிரதமர் ஹென்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1968 : ஸ்வாசிலாந்து பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
1970 : ஐரோப்பாவில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.
1975 : துருக்கியில் வைஸ் நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000 பேர் இறந்தனர்.
1988 : பப்புவா நியூ கினியா, மோரோபி மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஐந்து மலை கிராமங்கள் புதைந்தன.
76 பேர் இறந்தனர்.
1991 : 1991 அக்டோபர் 01 முதல் ரஷ்யாவின் லெனின்கிரேட் நகரின் பெயர் மீண்டும் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் என மாற்றப்படுவதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
1992 : ஆப்கானிஸ்தானின் சந்தை நகரான குல்பஹாரில் திடீரென காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் 400 பேர் உயிரிழந்தனர்.
1997 : தமிழகத்தில் 65% பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
லண்டனில் டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2.5 பில்லியன் மக்கள் தொலைக் காட்சி மூலம் இந்நிகழ்வை பார்த்தனர்.
2003 : மஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீன பிரதமர் பதவியிலிருந்து விலகினார் .
2006 : ஐரோப்பிய தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன.
2009 : பிலிப்பைன்ஸில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.
2012 : துருக்கியில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.
