
*
1652 : தைவானில் டச்சு ஆட்சிக்கு எதிராக சுமார் 15,000 விவசாயிகளும் போராளிகளும் கிளர்ச்சி செய்தனர்.
1799 : நாகலாபுரத்தை ஆங்கிலேயப் படைக் கைப்பற்றியது.
1812 : நெப்பொலியன் ரஷ்யப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
1818 : மூன்றாம் காருல் நார்வே மன்னராக முடிசூடினார்.
1822 : போர்ச்சுகல் ஆதிக்கத்தில் இருந்து பிரேஸில் விடுதலை பெற்றது.
1860 : கரிபால்டி ஆஸ்திரியப் படைகளைத் துரத்தி நேப்பிள்ஸ் நகரைக் கைப்பற்றினார்.
1864 : அமெரிக்க உள்நாட்டுப் போர்:- அட்லாண்டா நகரில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் .
1888 : இன்குபேட்டர் முதன் முதலில் நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் பயன்படுத்தப்பட்டது.
1909 : பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு விஜயா எனும் நாளேடு புதுவையில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.
1921 : நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் முதன் முதலில் மிஸ் அமெரிக்கா போட்டி நடந்தது.
1923 : பன்னாட்டு காவலகம் (இன்டர்போல்) பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டது.
1929 : பின்லாந்தில் பயணிகள் கப்பல்
மூழ்கியதில் 130 பேர் உயிரிழந்தனர்.
1931 : லண்டனில் இரண்டாவது வட்டமேஜை மாநாடு தொடங்கியது.
1936 : கடைசி டாஸ்மேனியப் புலி ஆஸ்திரேலியாவின்
ஹோபார்ட் தீவில் இறந்தது.
1942 : உக்ரைனில் 8,700 யூதர்கள் நாஜி ஜெர்மனியர்களால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
1943 : டெக்சாஸில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 55 பேர் உயிரிழந்தனர்.
1965 : இந்திய- பாகிஸ்தான் போர்:- இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப் போவதாக சீனா அறிவித்தது.
1977 : கனடா, ஒன்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து விழுந்தது.
1981 : எகிப்தில் 40,000 மசூதிகளின் நிர்வாகத்தை அரசு மேற்கொண்டது .
1991 : சோமாலியாவில் நடந்த இனக்கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
1999 : ஏதென்சில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட
600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விவரம் தெரியவந்தது.
2004 : கிரனாடாவை சூறாவளித் தாக்கியதில் 39 பேர் இறந்தனர்.
90% கட்டிடங்கள் சேதமடைந்தன.
2011 : ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 43 ஹாக்கி விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
2017 : தெற்கு மெக்ஸிகோவில் ஏற்பட்ட 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.
