*கர்நாடக முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024 முதல் ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.

ஏழு விதிமீறல்களில் ஆறு, முதல்வர் வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியாததற்காக இருந்தன. மேலும் வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன. விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே ரூ.2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

You missed