
குமரி மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகளாலும், பொதுமக்களாலும் பாராட்டு பெற்ற போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இன்று பணி நிறைவு பெற்றார்.பணி நிறைவு நாளான இன்று அவர் கோட்டாறு காவல் நிலையத்திலிருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அருகே பூவியூர் வரை தனது வீட்டிற்கு ஓடியே சென்றுள்ளார். பொதுவாக காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களை வாகனத்தில் அழைத்துச் செல்வது வழக்கம் ஆனால் அதற்கு மாறாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் 17 கிலோமீட்டர் தொலைவை ஓடிச் சென்ற காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்..
