மும்பையில் சுமார் 80 பயணிகளுடன் சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய 66 பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள Elephanta Caves பகுதிக்கு படகு மூலம் மக்கள் செல்வது வழக்கம். இன்று அவ்வாறு செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.
இந்திய கடற்படை, ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆணையம், கடலோர காவல்படை ஆகிய மூன்றும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

