நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.நாமக்கல், ஊராட்சி ஒன்றியம், தளிகை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட, கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குதல், கட்டுபாட்டு மையத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறியது, தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்டங்கள் வழங்கியது உள்ளிட்ட ஏராளமான புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. திரளான பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டனர்.
Related Post
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
புயல்.வெள்ளம்
பூ மார்க்கெட்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
விவசாயம்
*அக்.21 – வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி*
Oct 19, 2025
admin_vidiyalainokki
local news
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
வரலாற்றில் இன்று
வரலாற்று தகவல்கள்
விடுதலைப் போராட்ட வீரர்கள்
விழாக்கள்
அக்டோபர் 19,*
*நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை*
Oct 19, 2025
admin_vidiyalainokki
