
நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் மாற்றமின்றி அதே கட்டணத்தில் நீடிக்கிறது. தொலைதூர ரயில்களில் சாதாரண வகுப்புகளில் 500 கி.மீ வரை கட்டணம் உயர்வு இல்லை. 500 முதல் 1500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ.5 -ம், 1501 முதல் 2500 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ.10-ம், 2501 முதல் 3000 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ.15-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
