*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
*திருப்பூர்* கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓட்டம். பெரும்அசாம்பாவிதம் தவிர்ப்பு. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைத்தனர்.
*கன்னியாகுமரி மாவட்டம்* தேங்காய்பட்டணத்தை சேர்ந்த முஹம்மது அப்சல் (17)
அஜ்மல் (16) என்ற இரு மாணவர்கள் வாவுபலி
பொருட்காட்சியை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வரும் போது கல்லுதொட்டி அருகே நடந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
*புதுக்கோட்டை* குடுமியான்மலை அண்ணா பண்ணை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மான் உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.
*கன்னியாகுமரி* கேரளா எல்லை பகுதியான நெய்யார் அணையில் மூழ்கி துர்கா, அர்ஜுன் என்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு. நேற்றைய தினம் அணையில் குளிக்கச் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி மாயமான இரண்டு வாலிபர்களும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
*தூத்துக்குடி* கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மோதிக்கொண்ட விவகாரம் – ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு
*கள்ளக்குறிச்சி மாவட்டம்* சின்னசேலம் அருகில் உள்ள லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் மகேந்திரன் (48) இவர் லாரி டிரைவர். இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலை தலை நசுங்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல், சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. முதல் கட்டமாக இறந்து போன மகேந்திரன் மூன்றாவது மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*சென்னை* எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18ம் தேதி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன்(53) மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*புதுக்கோட்டை* மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ எம் பி ஆகியோரை அவதூறாக ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பஷீர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர் மதிமுகவினர்.
*திருநெல்வேலி* மேலப்பாளையம், ஆமின்புரம் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆசிரியர் ரபீக் 39, போக்சோ வழக்கில் கைது. இவர், அப்பள்ளி தாளாளர் ஹசன் அபுபக்கரின் மகன்.
*புதுக்கோட்டை* இரட்டைக் கொலை – 8 பேர் கைது.
ஆவுடையார் கோவில் பகுதியில் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது .
ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன்,
கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம்.
____________________________
____________________________
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
காவல் துறை
தமிழகம்
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
பள்ளிக்கல்வித்துறை
பொதுமக்கள் பிரச்சினை
விபத்து
