
ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம்.
இராசிபுரம்;ஆக,12-
ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் திம்மநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதி உள்ளது.இப்பகுதியில் உள்ள தொழில்முனைவோர் மை லைஃப் ஸ்டைல் என்ற தனியார் நிறுவனத்தில் முனைவராக செயல்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர் மத்துரூட்,சிங்கிலியன் கோம்பை மற்றும் மங்களபுரம் உள்ள பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றர்.
இதனை அடுத்து இந்த தனியார் நிறுவனத்தின் 13 ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் வடபத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி ஆனது குழு ஒருங்கினைப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
