
*செப்டம்பர் 05,*
*வ.உ.சிதம்பரம்பிள்ளை*
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 1872ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ம் தேதி சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
