
*
அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் 1766ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தை கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை கண்டறிந்தார்.
இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். மேலும் அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். இவர் 1800-ல் அணுக் கோட்பாட்டை கண்டுபிடித்தார்.
நவீன அணுக் கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தன்னுடைய 77-வது வயதில் மறைந்தார்.
