*
____________________________
*தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
____________________________
*திருப்பூர் மாவட்டம்*, அம்மாபாளையம், எஸ்.என்.ஜி. நகரில் வசித்த 72 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை, வீட்டில் தனியாக இருந்தபோது, நகைகளை கேட்டு மிரட்டிய ஒருவர், அவற்றை தர மறுத்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருமுருகன்பூண்டி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
____________________________
*மதுரை.* வட்டாட்சியர் கைது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக, மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் உடந்தையாக இருந்த டிரைவர் ராம்கே என்பவரும் கைது செய்யப்பட்டார்.
____________________________
*திருநெல்வேலி* தியாகராஜ நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சிவசுப்பிரமணியன் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் கோவையில் பணிபுரிந்தபோது ஒருவர் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் வாங்கிய விவகாரம் குறித்து விசாரித்தனர். இந்த சோதனையில் ரூ. 50 லட்சமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
____________________________
*புதுக்கோட்டை* அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் இன்று பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
____________________________
*தென்காசி மாவட்டம்*, ஆலங்குளம் அருகே உள்ள ககுளீர் குளத்தில் பயிரிடப்பட்ட தக்காளிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால், விவசாயிகள் அவற்றை வீதியில் கொட்டியுள்ளனர்.
____________________________
*தஞ்சை:* கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு.
ஒரு பெண்மணி, கைக்குழந்தை, 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, 5 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்கள் மீட்பு. அப்பெண் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட தகவல். போலீசார் தொடர்ந்து விசாரணை.
____________________________
*திருச்சி:*
த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சி காந்தி மார்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு த.வெ.க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திருச்சி காவல் துறை துணை ஆணையர் சிபினிடம் மனு அளித்துள்ளனர்.
____________________________
*கடலூர்* விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
____________________________
*திருச்சி* பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் கிட்னி திருடப்பட்டதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி சமயபுரம் பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
____________________________
*புதுக்கோட்டை* புறநகர் பகுதியில் திடீர் திடீரென நிறுத்தப்படும் மின்சாரம். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால்
தொழில் முனைவோர் பொதுமக்கள் அவதி.
____________________________
____________________________
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
திருச்சிராப்பள்ளி செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
