இராசிபுரம்;ஜன,26_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பல்வேறு பட்ட பொதுமக்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் என பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். தொடர்ந்து அருகில் உள்ள பகுதியில் செயல்படும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் தினந்தோறும் 25 முதியோர்காக மதிய உணவு வழங்கும் சேவையில் மாதம் ஒரு தொகையை நன்கொடையாக வழங்கி வருகிறார்.எனவே இவரின் சேவையை அறிந்த சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு இவருக்கு இவரின் கிராமத்தில் நேரில் சென்று குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை தலைவர் எம் எஸ் அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மாநிலசேவை ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வீரமணிகண்டன் அவர்கள் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு சிறந்த சேவையாளர் விருது வழங்கினார்….

