

ஏற்காடு:ஜன,28-
சேலம் ஏற்காட்டில் மாநில அளவிலான நபார்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நபார்டு தமிழ்நாடு மண்டல கலந்தாய்வு கூட்டம் இன்று 27.01.25ல் ஏற்காட்டில் துவங்கியது .
இதில் நபார்டின் முதன்மை பொது மேலாளர் ஆர்.ஆனந்த் அவர்கள் தலைமையேற்றார் .பொது மேலாளர்கள் பி.எஸ் ஹரிகிருஷ்னராஜ் மற்றும் ஜி.சந்தானம் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தை வழி நடத்தினார்.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 21 நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் மணி சுப்ரமணியன் மற்றும் ஏ.குமார்,பொது மேலாளர் தமிழ்நாடு கிராம வங்கி அவர்கள் தமிழ்நாடு கிராம வங்கியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து சிறப்புரை வழங்கினர்.
தமிழ்நாடு கிராம வங்கி நிதியுதவி செய்து,மேக்னம் தொண்டு நிறுவனம் செயல்படுத்தும் JLG குழுக்களின் வெற்றி பயணம் குறித்த புத்தகம் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பாக ஏற்காடு தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள்,ஆராய்ச்சிகள் மற்றும் வெட்டிவேர் மூலம் நீரை தூய்மையாக்கும் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அடுத்ததாக காபி வாரியத்தின் செயல்பாடுகள் , அந்நிறுவனத்தில் உள்ள காபி இரகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது .இதனை அடுத்து காபி மதிப்பு கூட்டல் செயல்விளக்கம் நடத்தப்பட்டது. இறுதியாக இவ்விரு நிலையங்களில் கிராமப்புற மற்றும் வேளாண் வளர்ச்சி மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.
