*திருச்சி சட்டக் கல்லூரி மாணவி மீது வழக்கு பதிவு*

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், ஸ்கேன் எடுக்கும் ஊழியரை காலால் உதைத்து தாக்கிய சட்டக்கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர்.

செவ்வாய்கிழமை அன்று மருத்துவமனைக்கு வந்த மாணவி கிரிஜா என்பவர், உடன் வந்த உறவினருக்கு உடனடியாக ஸ்கேன் எடுக்கும்படி சொன்னதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருப்பதால் வரிசைப்படிதான் ஸ்கேன் எடுக்க முடியும் என ஊழியர் வில்லியம் தெரிவித்த நிலையில், கிரிஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்து வில்லியம் கொடுத்த புகாரின் பேரில், கிரிஜா மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே கிரிஜா மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் ஒருவர் இவரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =

You missed