*மது பிரியர்கள் குமுறல்*
*பல சமுதாயப் பிரச்சினைகள் இருக்கும் பொழுது இதெல்லாம் பெரிய விஷயமா என கடந்து போனாலும் -தினசரி பல லட்சங்கள் கேள்வி கேட்பார் இன்றி எங்கேயோ? செல்லும் நிலையில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்*
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 20 ரூபாய் வசூல் செய்வதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பெறப்படும் ரூ. 20 ரூபாயில் பத்து ரூபாய் காலி பாட்டில் கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளும் நிலையில் மீதி பத்து ரூபாய் என்பது எழுதப்படாத விதியாக இருப்பதோடு, யாருக்கு செல்கின்றது என்ற மில்லியன் டாலர் கேள்வியும் பல ஆண்டுகளாக தமிழக முழுவதுமே இருந்து கொண்டேதான் உள்ளது..
இந்த நிலையில் மடத்துக்குளம் பகுதிகளில் செயல்படும் ஒரு சில அரசு மதுபான கடைகளில் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கப்படுவது மது பிரியர்களின் குமுறலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
அதிகபட்ச விற்பனை விலையாக 160 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள பீர் பாட்டில்களுக்கு 190 ரூபாய் பெறப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பத்து ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை குறிப்பிட்ட மதுபான கடைகளில் கொடுத்து திரும்பப்பெறும் நிலையில்.. 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தெரிகிறது…
அதிலும் கேள்வி எழுப்பும் ஒரு சிலருக்கு 170 ரூபாய் பீர் பாட்டில் என நினைத்து மறந்து கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்து விட்டோம் என மழுப்பல் பதிலுடன் பத்து ரூபாய் திரும்ப கிடைப்பதாகவும், இதைப் பற்றி அறியாதவர்கள் மற்றும் நமக்கு எதற்கு என கடந்த செல்லும் நபர்களிடம் வசூலிக்கப்படும் பல லட்சங்கள் என்னவாகின்றது… யார் யாருக்கு செல்கின்றது என்பது பெரிய கேள்விக்குறிதான்…
ஐந்து ரூபாய், பத்து ரூபாயாக மாறியது இன்று இன்னும் தைரியத்தோடு கேள்வி கேட்பார் இன்றி இருபது ரூபாய் கூடுதல் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளனர்… அதனை நாளடைவில் அனைவரும் ஏற்றுக் கொண்டு கடக்கவும் பழக்கி விடுவார்கள்…
*என்னமோ போங்க…*

