
சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரான முதலாம் ராஜராஜ சோழனின் மகனுமான, ராஜேந்திர சோழனுக்கு
சோழ சாம்ராஜ்ய பேரரசராக முடிசூட்டப்பட்ட தினம் இன்று.
( *28 ஜூலை 1014*)
இவர் 1014 முதல் இவர் காலமான ஆண்டான 1044 வரை ஆட்சி செய்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில் சோழநாடு,
இலங்கை,
மாலத்தீவு,
கடாரம்,
ஸ்ரீவிஜயம்,
மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.
ராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார்.
மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.
அங்கே சிவபெருமானுக்காக ராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
