
ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல் ரகங்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது என்றும் ஜூலை ரூ.40 விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். நூல் விலை ரகத்துக்கு ஏற்றபடி ரூ.320 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யபடுகிறது என்று கூறியுள்ளனர்.
