*!*

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து.

இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்.

தனி நபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு. பால், பனீர், பீசா, பிரட்டுக்கும் விலக்கு.

பான் மசாலா, புகையிலைப் பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிப்பு. 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு கார்களுக்கு 40% வரி.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் டிடிவி தினகரன். எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று ஆவேசம்.

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டதாக அமித்ஷா அதிருப்தி. தேர்தல் நேரத்தில் மோதல் போக்கு நல்லதல்ல என்றும் கண்டிப்பு.

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத மழையால் இயல்பு பாதிப்பு. லட்சக்கணக்கானோர் வீடுளை இழந்து தவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 15 =

You missed