அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்?

வாஷிங்டன்: துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் பதவியேற்றதால், அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

அமெரிக்காவில் அதிபர் மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மனைவியை இரண்டாவது பெண்மணி என்றும் அழைப்பது வழக்கம். தற்போது துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய பெருமையை பெறுவது இதுவே முதல் முறை.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பதவியேற்புக்கு பிறகு பேசுகையில், ஜே.டி.வேன்ஸ் மனைவி உஷா சிலுகுரி புத்திசாலி என பாராட்டினார்.

யார் இந்த உஷா வேன்ஸ்?

  • அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் மனைவி உஷா சிலுகுரி. இவருக்கு வயது 38.
  • இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
  • கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார்.
  • அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.
  • 2014ம் ஆண்டில் ஜே.டி.வேன்சை கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
  • துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

You missed