*28 ஜூலை 1914*

முதலாம் உலகப்போர் ஆரம்பமானது.

ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.
எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

இதன் அளவும், செறிவும் முன்பு எப்போதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது.

பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன.

60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வாயு, வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.

போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 3 =

You missed