இராசிபுரம்; ஜீன்,1-
சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் இன்று 20 முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது.இதில் விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவர் மா.வீரமணிகண்டன் , ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை தலைவர் பழனி, அருள் முருகன் அறக்கட்டளை தலைவர் அருள், சமூக ஆர்வலர் மகேந்திரன், பிரசாந்த் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தொடர்ந்து 50நாட்களாக உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..

