இராசிபுரம்;ஜன,26_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் மற்றும் மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் பாளையத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

