இராசிபுரம்; செப்,6
மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் உள்ளது இங்கு அரிமா சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார் .தொடர்ந்துமங்களபுரம் அரிமா சங்கம் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்கசெயலாளர் டாக்டர் பிரித்திவிராஜ், மற்றும்நாவல் பட்டி ஊராட்சி தலைவர் அரிமாகே.புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரிமா சங்க உறுப்பினர்கள்விஜயகுமார், சிட்டிபாபு, பள்ளிஉடற்கல்வி ஆசிரியர் முருகன், செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து இந்நிலையில்
கேக் வெட்டி, பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

