தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிதாரி இ.கா. ப முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல் படையினருக்கு போக்குவரத்து பணி சம்பந்தமான உபகரணங்கள் வழங்கி ஊர்காவல் படையினர் போக்குவரத்து அலுவல் புரியும் முறையினை முதன்முறையாக தொடங்கி வைத்தார்.
மேற்படி ஊர் காவல் படையினர் களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை ஆகிய காவல் நிலையங்களில் போக்குவரத்துக் காவல் பணிபுரிய நியமிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. P. சரவணன் இ .கா .ப அவர்கள், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு. N.மணிவண்ணன், இ .கா .ப மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். V. பிரசண்ண குமார், இ .கா .ப ஆகியோர் உடன் இருந்தனர்.

