இது என்ன மாதிரி நேர்மை?

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று.

வாடிக்கையாளருக்கு விற்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் விலை.

நேர்மையானவர்களாக இருந்தால், பாட்டில் திருப்பிக் கொடுப்பவர்களை ஊக்குவிக்க டாஸ்மாக்தான் பாட்டிலுக்கான அடக்க விலையை கொடுக்க வேண்டும்.

அப்படியானால் பாட்டில் திரும்பி வராத மதுவிற்கு, பத்து ரூபாய் விலை அதிகம் தானே? இது மறைமுக கொள்ளை இல்லையா?

சரக்கு வாங்கிக் கொண்டு பாருக்குள் நுழைந்தால் பாட்டிலை திருப்பி எடுத்துச் செல்ல பார் உரிமையாளர்(?) அனுமதிப்பாரா?

பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை அமுல்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் போனதுதான் வினோதம்..

பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை இப்போது பெரிய அளவில் சீரமைக்க போவதாக தவெக கூட்டணி அரசு சொல்கிறது.. பார்ப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =

You missed