*வரலாற்றில் இன்று*
*14 ஜூலை 2026-செவ்வாய்*
*========================*

1223 : எட்டாம் லூயி பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1789 : பிரெஞ்சுப் புரட்சி :- பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையை தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து ராணுவத் தளவாடங்களை கைப்பற்றினர்.

1798 : அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.

1874 : சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது.
20 பேர் உயிரிழந்தனர்.
812 கட்டிடங்கள் சேதமடைந்தன.

1900 : சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி
தியென்சினை கைப்பற்றியது.

1933 : ஜெர்மனியில் நாஜி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1948 : இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பால்மிரோ
டோக்லியாட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுடப்பட்டார்.

1958 : ஈராக் புரட்சி :- ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலைவரானார்.

1966 : குவாட்டமாலாவில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 225 பேர் உயிரிழந்தனர்.

1967 : நாசாவின் சர்வேயர் -4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1976 : கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1987 : கராச்சியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 72 பேர் உயிரிழந்தனர்.

1995 : mp3 பெயரிடப்பட்டது.

இலங்கை ராணுவத்தினரின் புக்காரா விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

2016 : பிரான்ஸில் நைஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர்.
400 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =

You missed