*மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது*

முன்னதாக 8.4.2009 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது

திருக்குட நன்னீராட்டு விழாவை அடுத்து செப்டம்பர் 11 முதல் 17 வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன

கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாக சாலைகள் மற்றும் அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டன

புனித நீர் கலசத்தில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் மற்றும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

9 வகையான தானியங்கள், மூலிகை பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் என 96 வகையான ஹோம பொருட்கள் மூலம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜை மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தி வருகிறார்கள்

இதனை தொடர்ந்து திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது

காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்கள் சமகால திருக்குட நன்னீராட்டு விழா

காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா

காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா

5 இலட்சம் டன் வண்ண, வண்ண மலர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் என அனைத்து பகுதிகளிலும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

கோவில் மேற்கூறையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 நபர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + sixteen =

You missed