*பீகார் ரயில் அதிர்ச்சி: மொபைல் திருடனை ஜன்னலில் தொங்கவிட்டு நடைமேடையில் வீசிய பயணிகள்!*

பீகாரின் பாகல்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயன்ற நபரை, பயணிகள் கையைப் பிடித்துக் கொண்டு ரயிலுக்கு வெளியே தொங்கவிட்டனர்.

ரயில் வேகமெடுத்த நிலையில் பயணிகள் அவரது கையை விட்டதால், அந்த நபர் நடைமேடையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த நபரை ரயில்வே போலீசார் மீட்டுத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =

You missed