*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

தேர்தல் வெற்றிக்கு பின் முதல்முறையாக பெரம்பூர் சென்றார் முதலமைச்சர் விஜய். எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்ததுடன், நியாய விலை கடையில் ஆய்வு.

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மும்பை வந்தன. 10 தமிழர்களின் சடலங்களையும் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு.

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச உடைகளை அணியக்கூடாது என்ற புதிய
நிபந்தனைகளை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே மின்வெட்டு. பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் அவதி.

அதிமுகவில் இருந்து தவெக சென்றவர்கள் சனிக்கிழமை சந்தையில் விற்கப்பட்டவர்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்.

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் மத்திய கிழக்கில் குழப்பம்

ஹோர்முஸ் நீரிணை மேலாண்மையில் அமெரிக்காவுக்கு எந்தவித பங்கும் இல்லை என ஈரான் திட்டவட்டம். அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் நுழைய முயன்றால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.

ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல். பதிலடியாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியதால் பதற்றம்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை. 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், தொடரையும் வென்று அசத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

You missed