
*🔥இன்று ஆடிப்பெருக்கு… ஏன் கொண்டாடப்படுகிறது?*
தமிழ் மாதமான ஆடியின் 18-வது நாளில், நதிகளுக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடப்படுகிறது.
காவிரியில் புதுவெள்ளம் வருவதை வரவேற்று, வளமான விவசாயம், செழிப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி காவிரி அன்னையை வழிபடுவது இந்த நாளின் முக்கிய சிறப்பாகும்.
மஞ்சள் கலந்த நீருடன் பூஜை செய்தல், விளக்கேற்றி வழிபடுதல், தான தர்மங்கள் செய்தல் மற்றும் திருமணமான பெண்கள் புதுத் தாலி அணிவது உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே மஞ்சள் கலந்த நீர் வைத்து விளக்கு பூஜை செய்து காவிரி அன்னையை வழிபடலாம்.
ஆடிப்பெருக்கன்று காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளை நினைத்து வழிபட்டால் வளமும், செழிப்பும், நலனும் பெருகும் என்பது ஐதீகம்
