*தலைப்புச் செய்திகள்!*

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் வினோத். பயிர்க்கடன் 100 சதவீத தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் வகையில் நடவடிக்கை.

கிராமப்புற மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 5 ஆடுகள் வழங்கப்படும் என்றும் தகவல்.

மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி வழங்கிய திட்டத்தின் பெயரை மாற்றி நிதி ஒதுக்கீடு. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பெயர் வெற்றி வீடு திட்டம் என மாற்றம்.

தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாததால் ஏமாற்றம். பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு இல்லை என மக்கள் வேதனை.

திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட 14 திட்டங்களின் பெயர்களை மாற்றிய தவெக அரசு. வெற்றி என்ற பெயரைச் சேர்த்து புதிய திட்டங்கள் போல பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு.

‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம். திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் என்றும் கருத்து.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி கருத்து. நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்கான திட்டம் இல்லை என்றும் விமர்சனம்.

திமுகவின் திட்டங்களில் வெற்றி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பேட்டி. தவெக அரசின் முதல் பட்ஜெட்டிற்கு “பூஜ்ஜியம் மார்க்தான்” என்றும் விமர்சனம்.

தவெக அரசின் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என மு.வீரபாண்டியன் விமர்சனம். மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரத்து 500ஆக உயர்த்தவும் இல்லை என பெ.சண்முகம் குற்றச்சாட்டு.

திமுக எம்எல்ஏக்களாக தொடர்வதாக மதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில் செல்வன் உறுதி. ராஜினாமா செய்யுமாறு தங்களை வைகோ நிர்பந்தித்தார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு.

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு 6 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு. முதலமைச்சர் ரங்கசாமிக்கு நிதித்துறை, நமச்சிவாயத்திற்கு உள்துறை இலாக்கா ஒதுக்கீடு.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி.

நீட் தேர்வை தடை செய்யக்கோரி, நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் 6-வது நாளாக பட்டினிப் போராட்டம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.

கொளத்தூர் தொகுதி இ.வி.எம். குளறுபடி தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார். 30 சதவீத வாக்கு இயந்திரங்களில் குளறுபடி என குற்றச்சாட்டு.

தூத்துக்குடி அருகே இருக்கை எண்ணிக்கையை மீறி மாணவர் சேர்க்கை எனப் புகார். தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

வத்தலகுண்டு அருகே மகாலட்சுமி கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலம். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்… பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு.

கான்பூர் – லக்னோ உயர்மட்ட சாலை, திறக்கப்பட்ட இரண்டே வாரத்தில் 5 இடங்களில் விரிசல். 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் திட்டத்தில் ஊழல் என சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு.

ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய நியமன முறைகேடுகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு. மாணவர்களின் போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு.

வரும் 16-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டம்.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம், சிறார் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் பரவிய குளறுபடி விவகாரம். ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷணவ்வை சந்தித்து மன்னிப்பு கோரியது மெட்டா.

நிலவின் மேற்பரப்பில் மோதி, புதிய பள்ளத்தை உருவாக்கிய பால்கன்-9 ராக்கெட் பாகம். எரிபொருள் முழுவதும் தீர்ந்ததால் ராக்கெட்டின் திசையை மாற்ற முடியவில்லை என விஞ்ஞானிகள் தகவல்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு. போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு. ஏவுகணை தடுப்பு அமைப்பு பற்றாக்குறையை பயன்படுத்தி தாக்குதலை தீவிரப்படுத்த திட்டம்.

சீனாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி. திறந்த அரங்கில் நடந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்பு உற்சாகம்.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு. அறிமுக இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =

You missed