*வரலாற்றில் இன்று*
*01 அக்டோபர் 2026-வியாழன்*
*========================*

கி.மு.331: அலெக்சாண்டர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியஸ் மன்னனை குவாகமேலா போரில் வென்றார்.

959 : முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1785 : சென்னையில் முதல் ஆங்கில தினசரி இந்தியன் கூரியர் வெளியானது.

1795 : பெல்ஜியம் பிரான்ஸால் கைப்பற்றப்பட்டது.

1814 : நெப்போலியனின் தோல்வியால் ஐரோப்பாவில் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.

1827 : ரஷ்ய- பாரசீகப் போர் :-ரஷ்ய ராணுவம் ஆர்மீனியாவின் யெரெவானைக் கைப்பற்றியது.
ஆர்மீனியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

1833 : இலங்கையில் சட்டப்பேரவை மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன.

1843 : நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1854 : இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
அரை அணா தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

1869 : உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1870 : பிரிட்டனில் தபால் அட்டை விற்பனைத் தொடங்கியது.

1880 : முதலாவது மின்விளக்குத் தொழிற்சாலையை தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பித்தார்.

1882 : பிரிட்டனில் ரிப்ளை பெயிட் போஸ்ட் கார்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.

1887 : பிரிட்டன் பலுசிஸ்தானைக் கைப்பற்றியது.

1892 : இலங்கையில் இந்திய இரண்டணா நாணயம் செல்லாது என அறிவிக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1910 : லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கட்டிடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் உயிரிழந்தனர்.

1918 : முதலாம் உலகப் போர் :- அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றின.

1931 : ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

1939 : இரண்டாம் உலகப் போர் :- ஒரு மாத முற்றுகைக்குப் பின்பு ஜெர்மனிப் படைகள் வார்ஸா நகரைக் கைப்பற்றின.

1942 : இரண்டாம் உலகப்போர் :- அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஹாங்காங்கில் இருந்து பிரிட்டிஷ் போர்க்கைதிகளை ஏற்றி வந்த லிஸ்பன் மாரு என்ற கப்பலை தாக்கி மூழ்கடித்தது.

1943 : இரண்டாம் உலகப் போர் :- நேப்பிள்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.

1946 : நாஜித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.

1949 : மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 : சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.

1960 : சைப்ரஸ், நைஜீரியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1961 : கிழக்கு மற்றும் மேற்கு கேமரூன் ஒன்றுபட்டு கேமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.

1964 : ஜப்பான், சின்கான் சென் அதிவேக ரயில் சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.

1968 : பீகார், மேற்குவங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1969 : கான்கார்ட் விமானம் முதன் முறையாக ஒலியின்  வேகத்தைத் தாண்டி பறந்தது.

1971 : வால்ட் டிஸ்னி வேர்ல்ட் புளோரிடாவில் ஆரம்பமானது.

1978 : துவாலு பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது.

1982 : சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு (சி.டி) வெளியிட்டது.

1989 : ஓரினத் திருமணத்தை உலகில் முதன்முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.

1992 : விடுதலைப் புலிகள் கட்டைக்காடு ராணுவக் காவல் அரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

1994 : பலாவு ஐ.நா. விடமிருந்து விடுதலை பெற்றது.

2001 : ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2005 : பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ஆஸ்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.

2012 : ஹாங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.

2015 : குவாட்டமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.

2017 : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =

You missed