சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையமானது கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட லாரி போன்ற வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

தகவல் அறிந்த, சூளகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்வு இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்த நிறுத்தினர். மேலும் சம்பவம் குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

You missed