எந்த ஒரு கூட்ட நெரிசலும் இல்லாமல் பயணம் செய்வது என்பது ஒரு அலாதியான விஷயம் தான். அதிலும், வெளிநாடுகளில் கூட்டமே இல்லாமல் ஒரு இடத்தை அமைதியாக ரசித்து பார்க்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். அப்படி கூட்டமே இல்லாமல் அந்த நாட்டின் அழகை நீங்கள் போதும்… போதும்… என்று சொல்லும் அளவிற்கு ரசிக்கும் படியான பல நாடுகள் உள்ளது. அதாவது, இந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு நாளிலேயே இந்த நாடுகளை சுற்றி பார்த்துவிடலாம்.

*வாட்டிகன்*

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாட்டிகன் நகரம் தன்னாட்சியுடைய சுதந்திர நகரம் ஆகும். குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 121 ஏக்கர் மட்டும் தான் என்று கூறப்படுகிறது. இந்த நகரத்தில் மருத்துவமனைகளே இல்லையாம். பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டுமாம். கூட்ட நெரிசல் இல்லாத இந்த நகரத்தை நீங்கள் ஒரே நாளில் சுற்றி பார்த்துவிடலாம்.

*நியூ (Niue)*

நியூ என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். இங்கு சுமார் 1800 பேர் மட்டுமே வசிக்கின்றனர். பாலினேசிய பாரம்பரியங்களில் செழித்து வளமான கலாச்சாரம் கொண்ட இது, நியூசிலாந்துடன் சுதந்திர இணைப்பில் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.

*துவாலு (Tuvalu)*

துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். இங்கு சுமார் 9,000 மக்கள் வாழ்கின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக, அங்கு வாழும் மக்கள் தினமும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். விவசாயமும் மீன்பிடி தொழிலும் முக்கிய வருமான ஆதாரங்களாக உள்ளன.

*நௌரு (Nauru)*

நௌரு என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மற்றொரு தீவு நாடாகும். உலகின் மிகச் சிறிய குடியரசுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் சிறிய மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாஸ்பேட் வளங்கள் தீர்ந்த பிறகு பெரிய பொருளாதார சரிவை எதிர்கொண்டது.

*குக் தீவுகள் (Cook Islands)*

குக் தீவுகள் என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தன்னாட்சி கொண்ட தீவு நாடாகும். இந்த தீவில் கடந்த ஆண்டு வரை 13,263 பேர் வசித்து வந்துள்ளனர். அதிக அளவிலான மக்கள் இடப்பெயர்வு காரணமாக தற்போது இந்த தீவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =

You missed