பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, நாம்பயன்படுத்தும் சமையல் எரிவாயும் கச்சா எண்ணெய் மூலமே கிடைக்கிறது. கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி உருவாக்கப்படுவது ஒரு சுவாரஸ்யமான செயல்முறை.

கச்சா எண்ணெயைப் பெரிய உலையில் சூடுபடுத்தும்போது, அதில் உள்ள பல்வேறு பொருட்கள் அவற்றின் கொதிநிலைக்கு ஏற்ப வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிகின்றன. உலையின் அடிப்பகுதி அதிகவெப்பமாகவும், மேல்பகுதி குறைந்த வெப்பமாகவும் இருக்கும். குறைந்த கொதிநிலை கொண்ட எல்பிஜிவாயுக்கள் உலையின் மேற்பகுதிக்குச்சென்று தனியாகப் பிரிக்கப்படுகின்றன. அதற்கு அடுத்தடுத்த அடுக்குகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய், ஜெட் எரிபொருள், டீசல் போன்றவை பிரிக்கப்படுகின்றன.

மிக அதிக கொதிநிலை கொண்ட தார் மற்றும் பிசுபிசுப்பான பொருட்கள் உலையின் அடிப்பகுதியில் தங்கிவிடுகின்றன. உலையின் மேற்பகுதியில் சேகரிக்கப்பட்ட வாயுக்கள், அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு திரவமாக மாற்றப்பட்டு சிலிண்டர்களில் நிரப்பப்படுகின்றன. இதுவே நாம் பயன்படுத்தும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =

You missed