16 வயது சிறுமியை ஹோட்டலில் வைத்து சீரழித்த சப் இன்ஸ்பெக்டர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வரை காமக்கொடூரன் ஆக மாறிய பயங்கரம்.!!

பெங்களூரை சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, இவர் பட்கல் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, ஒரு 16 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, தனியார் விடுதி ஒன்றில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது அதிர்ச்சிப் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அபிநந்தன் கவுடா மீது வழக்குப் பதிவு செய்தனர். விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

You missed