*!*
நீட் முறைகேடு, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது.
ராகுல் காந்தியை தரதரவென கைது செய்தபோது மூக்கில் ரத்தக் கசிவு. 3 மணி நேர காவலுக்கு பிறகு விடுவித்த டெல்லி போலீஸ்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம். ஒன்றிய பாஜக அரசு அடக்குமுறையை கையாளுவதாக கண்டன முழக்கம்.
தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் விடிய, விடிய போராட்டம். உத்தவ் தாக்கரே, திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இளைஞர்களுக்கு ஆதரவு.
மாணவர்கள் நலனில் ஒன்றிய பாஜக அரசுக்கு அக்கறை இல்லையென ராகுல் காந்தி குற்றச்சாட்டு. தேர்வு முறையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்.
மாணவர்களை ராகுல் காந்தி அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பு புகார்.
டெல்லியில் போராடிய இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய சம்பவம். அவசர வழக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக சென்னையில் போராடிய மாணவர்கள் குண்டுகட்டாக கைது. மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாணவ அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டம்.
தவெக அரசின் ஆணவத்துக்குச் சரியான பாடத்தை மக்களே புகட்டுவார்கள். அவதூறு வழக்குகளில் 2 மாதங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக தொடர்ந்து ஆலோசனை.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவிப்பு.
தெருநாய் பிரச்சினையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தவெக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு.
திருப்பூரில் பிஏபி பாசன திட்டம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம். இருவேறு கருத்து நிலவிய விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தஞ்சாவூரில் கர்நாடகா முதல்வரின் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம். தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை திறந்து விட மறுப்பதாக முழக்கம்.
தென்காசி அருகே இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்ததால் பரபரப்பு. ஓரினச்சேர்க்கை தகராறில் கொன்ற சிறார்கள் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை.
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக 10-வது நாளாக சிபிசிஐடி விசாரணை. இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி.
டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தலைமைச் செயலகத்தில் போராட்டம். கைது செய்யப்பட்ட ராப் பாடகர் அறிவை நேரில் அழைத்து பேசினார் முதலமைச்சர் விஜய்.
டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து பரிசீலனை. பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ஆய்வு செய்வதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்.
நீட் முறைகேடு, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக 2-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம். மேகதாது குறித்து விவாதிக்க பச்சை துண்டு அணிந்தபடி அவைக்கு வந்த திமுக எம்.பி-க்கள்.
இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள். போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்ட களமாக மாறிய ஷம்பு எல்லை.
அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சோனம் வாங்சுக். டெல்லி உயர் நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.
சிக்கிம் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு. காணாமல் போன 5 தொழிலாளர்களை தேடும் பணி மும்முரம்.
காஷ்மீரில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் சேதம். உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்.
சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் செங்கடல் வழியை மூடுவதாக ஹவுதி அமைப்பு அறிவிப்பு. தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலி. காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்.
சீனாவின் சிச்சுவான் மாகாண பூங்காவில் மீண்டும் தென்பட்ட பனிச்சிறுத்தை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்டதாக பூங்கா நிர்வாகம் தகவல்.
கம்போடியாவில் 5 ஆயிரம் கிலோ போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு. போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற கம்போடியா தொடர் நடவடிக்கை.
உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு. 20 பேர் கொண்ட அணியை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வழிநடத்துகிறார்.
அரசு அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
நாளை
நெடுஞ்சாலை துறை
நேற்று
பள்ளிக்கல்வித்துறை
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
விபத்து
