*

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி. தீவிரவாதிகளை ஒடுக்குவது போல் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்ப்பு.

டெல்லி கரப்பான் பூச்சி போராட்டத்தின்போது இளைஞரை சுற்றி வளைத்து அடித்த போலீசார். போலீசாரை பார்த்து அடிங்க சார் அடிங்க சார் என இளைஞர் ஆவேசம்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்கள் விடிய விடிய போராட்டம். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், போலீசாரை கண்டித்தும் முழக்கம்.

டெல்லியை தொடர்ந்து நாட்டின் மற்ற நகரங்களுக்கும் பரவிய போராட்டம். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம்.

கரப்பான் பூச்சி கட்சியினருடன் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பேச்சுவார்த்தை.பிரதான் பதவி விலகல் உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற சிஜேபி வலியுறுத்தல்.

நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதானுக்கு முற்றும் நெருக்கடி. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பீயூஸ் கோயலை சந்தித்து அடுத்தடுத்து ஆலோசனை.

எம்.பி.க்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சந்திக்க அனுமதி அளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் அறிவிப்பு.

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி. தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்.

முதலமைச்சர் குறித்த பேச்சுக்காக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது.15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டது உச்சபட்ச அடக்குமுறை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். பேசினாலே கைது என்ற அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக காட்டம்.

சென்னை சேத்துப்பட்டில் பயோ – சி.என்.ஜி. உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் ஆய்வு. இயற்கை எரிவாயு உற்பத்தி குறித்து கேட்டறிந்தார்.

பரந்தூருக்கு மாற்றாக வேறு விமான நிலையத்தை அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசிடம் இருந்து கோரிக்கைகள் வரவில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில்.

கும்பகோணம் 3 கிலோமீட்டர் தூரம் சாலையில் மின் விளக்குகள் இல்லை என புகார். இரவில் தீப்பந்தங்களை ஏந்தி நூதன முறையில் போராட்டம்.

சீர்காழியில் காருக்குள் வைத்து முதியவரை தாக்கிய தவெக நிர்வாகி. முதியவர் மீதான தாக்குதலை ரீல்ஸாக பதிவிட்டதால் அதிர்ச்சி.

ஆரணியில் உணவகத்தில் அசைவம் சாப்பிட்ட 15 பேருக்கு உடல்நலம் பாதிப்பு. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போதே எலிகள் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு.

திருவாரூரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 76 ரூபாய் லஞ்சம் என புகார். ஒவ்வொரு முறையும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக ஆட்சியரிடம் மனு.

வந்தவாசி அருகே கோயிலில் 8 சவரன் நகை திருட்டு. தலைமறைவாக இருந்த கோயில் அர்ச்சகர் கைது.

திருச்சியில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய16 வயது சிறுவன். கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் விளிம்பில் தொங்கிய காரால் பரபரப்பு.

நாகர்கோவிலில் போக்குவரத்து போலீஸாரை போல வாகன சோதனை செய்த மூன்று பேர் கைது. ரீல்ஸ் மோகத்தில் போலீசார் போல செய்ததாக விசாரணையில் தகவல்.

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை. வெள்ள பாதிப்புகளால் 10 பேர் உயிரிழப்பு. மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு.

மேற்கு வங்கத்தில் மலைச்சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம். நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள்.

இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி அறி்முகம். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம்.

அல்பேனியாவில் விடுதிகள் அமைக்க அனுமதிக்கும் சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம். எம்.பி.க்களின் வாகனங்கள் மீது சரமாரியாக முட்டை்களை வீசி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

சீனாவில் கோலாகலமா நடைபெற்ற கோடைக்கால விளையாட்டு விழா. மக்களை கவர்ந்த குறுகிய கால்கள் கொண்ட நாய்களுக்கான நீச்சல் போட்டி.

தாயகம் திரும்பிய ஸ்பெயின் அணியை வரவேற்க கூடிய 20 லட்சம் பேர்.  திறந்தவெளி பேருந்தில் தலைநகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீரர்கள்.

இறுதிப்போட்டியில் பெற்ற காயம் ஆற நீண்ட காலம் ஆகும். உலககோப்பை தோல்வி குறித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =

You missed