
விவசாயிகள் பயிர் கடனை முழுவதும் ரத்து செய்ய வேண்டி மங்களபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இராசிபுரம்;ஜீலை-16
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களின் நிலையம் எவ்வித நிலையற்றமும் இல்லாமல் இருந்து வரும் சூழ்நிலையில் உரங்கள் மருந்துகள் உட்பட இதற்கான விலையை நிர்ணயம் செய்வதாக மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு தமிழ்நாட்டில் கூட்டுறவு பயிர் கடன் 5 ஏக்கருக்கும் கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், அஞ்சு ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்வதாக தவேக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. எனவே அறிவித்தபடி விவசாயிகளுக்கான பயிர் கடனை ரத்து செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மங்களபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் முருகசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் கலந்து கொண்டனர்.
